25.3 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இலங்கை

வீதியோர புதையலை தோண்டும் நேற்றைய முயற்சி வெற்றியளிக்கவில்லை

வெயாங்கொடை வந்துராவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் புதையல் ஒன்றை கண்டறிவதற்காக நேற்று பிற்பகல் வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள், புதையல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பாறையை தோண்டி வெடிக்கச் செய்யும் முயற்சி வெற்றியளிக்கவில்லை.

அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நேற்று காலை முதல் அந்த இடத்தை தோண்டியதில், நிலத்தடியில் சுமார் இருபது அடிக்கு கீழே கல் தடுப்பு ஒன்று காணப்பட்டதையடுத்து, அதை தோண்டி வெடிக்கச் செய்ய முடிவு செய்யப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிரேன் மூலம் இதனை அகற்றுவதற்கு பல தடவைகள் முயற்சித்த போதிலும், அதனை இருந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு உருட்டிச் சென்றதே தவிர அகற்ற முடியவில்லை.

அதனால், மாலை 4.10 மணியளவில் கல் குவியலை மீட்கும் முயற்சி கைவிடப்பட்டது. நேற்று. அகழ்வாராய்ச்சி குழிகளில் புதையல்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் கல் குவியல்களை வெடிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி நேற்று மாலை சுமார் 5 மணி வரை தோண்டப்பட்ட குழியில் நிரம்பிய தண்ணீரை அகற்றும் பணி நடைபெற்று பின்னர் பணிகள் நிறுத்தப்பட்டது. நீதிமன்றத்திற்கு அறிவித்ததன் பின்னர் இன்றும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்த விடயத்தில் ரணில், கோட்டா சிறப்பு: அனுர பாராட்டு!

Pagetamil

இந்தியர் என நினைத்து பிடித்த யாழ் ஐயரை விடுவிக்க இலஞ்சம்: வசமாக சிக்கிய அதிகாரி!

Pagetamil

மாணவி கடத்தல் விவகாரம்: அசமந்தமாக செயற்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி இடைநீக்கம்!

Pagetamil

இந்திய தூதரிடம் வலைகளை வாங்கி தமது உறவினர்களுக்கு மட்டும் கொடுத்த மீனவ பிரதிநிதிகள்

east tamil

பெற்றா மலிவு விலை கலர் லைட்… தங்கத்துடன் கிளுகிளுப்பான கொழும்பு பயணத்தில் மாட்டிய அர்ச்சுனா: அனுராதபுரம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

Pagetamil

Leave a Comment