26.4 C
Jaffna
December 14, 2024
Pagetamil
உலகம்

அமெரிக்க போர்நிறுத்த திட்டத்தில் மாற்றங்களை வலியுறுத்தும் லெபனான்!

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய துருப்புக்களை விரைவாக திரும்பப் பெறுவதை உறுதிசெய்யவும், இரு தரப்பினருக்கும் தற்காப்பு உரிமையை வழங்கவும் அமெரிக்க போர் நிறுத்த திட்டத்தில் மாற்றங்களை லெபனான் நாடுகிறது என்று லெபனான் மூத்த அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

லெபனான் குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர பிடன் நிர்வாகத்தின் கடைசி மாதங்களில் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க மத்தியஸ்தர் அமோஸ் ஹோச்ஸ்டீனுடன் பெய்ரூட்டில் இந்த வாரம் நடந்த சந்திப்புகளின் போது லெபனான் அதிகாரிகள் மாற்றங்களைக் கோரினர்.

லெபனானால் கோரப்பட்ட திருத்தங்கள், அவற்றின் விவரங்கள் முன்னர் தெரிவிக்கப்படவில்லை. செவ்வாய் கிழமை பெய்ரூட்டுக்கு விஜயம் செய்தபோது “எங்கள் பிடியில் உள்ளது” என்று அவர் கூறிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக்க ஹோச்ஸ்டீனுக்கு இன்னும் வேலை இருக்கிறது என்பதையே இந்த விபரங்கள் குறிக்கிறது.

லெபனான் அதிகாரியொருவர் ரெய்ட்டர்ஸிடம்- “போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன் இஸ்ரேலிய துருப்புக்களை உடனடியாக வாபஸ் பெற லெபனான் விரும்புவதாகவும், அதனால் லெபனான் இராணுவம் அனைத்து பகுதிகளிலும் நிலைநிறுத்த முடியும்” என்றும், அதனால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியும் என்றும் கூறினார்.

போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட 60 நாட்களுக்குள் இஸ்ரேல் இராணுவம் திரும்பப் பெறப்பட வேண்டுமென அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மொழி குறித்த அவர்களின் நிலைப்பாடு குறித்த ராய்ட்டர்ஸ் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான அதன் தீவிரமான தாக்குதலின் ஒரு பகுதியாக ஒக்டோபர் 1 அன்று இஸ்ரேல், தெற்கு லெபனானுக்கு தரைப்படைகளை அனுப்பியது.

தற்போதைய வரைவு ஒப்பந்தம் “லெபனான் எல்லைகளில்” இருந்து பகுதியாக வெளியேறுவதைக் குறிக்கிறது என்று அதிகாரி கூறினார், அதே நேரத்தில் லெபனான் “லெபனான் எல்லைக்குள்ளிருந்து இஸ்ரேலிய துருப்புக்கள் எல்லையில் இருந்து முழுமையாக வெளியேறுவதை உறுதி செய்ய விரும்புகிறது, பகுதியாக அல்ல.

லெபனான் இரு தரப்பினரின் “தற்காப்புக்கான” உரிமையைப் பாதுகாக்கும் திட்டத்தையும் நாடியுள்ளது, லெபனான் அதிகாரி விவரிக்காமல் கூறினார்.

ஒரு போர்நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டாலும், ஹிஸ்புல்லாவைத் தாக்கும் உரிமை தங்களுக்கு இருக்கும் என்று இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேலின் வெளியுறவு மந்திரி புதனன்று, ஹிஸ்புல்லா தெற்கு லெபனானில் இருந்து வெளியேறி லெபனானுக்குள் ஆயுதங்களை தரை அல்லது கடல் மற்றும் விமான நிலையங்கள் வழியாக கொண்டு வரக்கூடாது என்று தனது நாடு “அமுல்படுத்த” விரும்புவதாக கூறினார்.

லெபனான் அதிகாரி, ஹிஸ்புபொல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது குறித்த அமெரிக்க வரைவு ஒப்பந்தத்தில் எந்த மொழியும் இல்லை என்றும் லெபனான் தனது இறையாண்மையை மீறுவதை நிராகரித்ததாகவும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பல இலட்சம் கோடி சொத்தை உதறிவிட்டு பௌத்த பிக்குவான இலங்கைத் தமிழரின் மகன்!

Pagetamil

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 27 பேர் பலி

Pagetamil

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்: பின்னணியும் தாக்கமும் என்ன?

Pagetamil

உக்ரைன் போரை நிறுத்த சிறப்பு தூதரை நியமித்த ட்ரம்ப்

Pagetamil

உக்ரைனை தாக்கியது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையல்ல: ரஷ்யாவின் புதிய ஏவுகணை பரிசோதனை!

Pagetamil

Leave a Comment