பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த ஜனாதிபதி வேட்பாளர்கள்

Date:

இவ்வருடம் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களில் பலர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கு மேலதிகமாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தொழிலதிபர் திலித் ஜயவீர மற்றும் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகிய இரு வேட்பாளர்களும், இம்முறை பொதுத் தேர்தலில் பொதுமக்கள் அதிகாரம் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் திலித் ஜயவீர 1,22,396 வாக்குகளையும், ரொஷான் ரணசிங்க 4205 வாக்குகளையும் பெற்றனர். கம்பஹா மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகாரம் கட்சி 25,939 வாக்குகளைப் பெற்றது, இது 2.10 சதவீதமாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் திலித் ஜயவீர 17,143 வாக்குகளையும், ரொஷான் ரணசிங்க கம்பஹா மாவட்டத்தில் 360 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

களுத்துறை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகாரம் இம்முறை பொதுத் தேர்தலில் 13,564 வாக்குகளையும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீர களுத்துறை மாவட்டத்தில் 10,261 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

களுத்துறை மாவட்டத்தில் ரொஷான் ரணசிங்க 249 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பத்தரமுல்லை செளரதன தேரர் 6839 வாக்குகளையும். ஜனக ரத்நாயக்க 2405 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அவர்களும் இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிட்ட போதும், வெற்றியடையவில்லை.

நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட கே.கே. திரு.பியதாச கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதோடு, இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ச கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு 3,42781 வாக்குகளை பெற்று இம்முறை தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தேசியப்பட்டியலை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க 22,99767 வாக்குகளைப் பெற்று, இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை, அவர் தேசியப் பட்டியலில் இடம்பெறவில்லை.

2010 ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய எம்.கே.சிவாஜிலிங்கம், இம்முறை யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டும், வெற்றியடையவில்லை.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானம் விபத்து: 8 பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்!

கலிபோர்னியாவில் திங்களன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பி-52 ரக குண்டுவீச்சு...

சூரியவன்ஷிக்கு முன்னாள் இலங்கை கப்டன் வழங்கிய ஆலோசனை

முன்னாள் இலங்கை கப்டன் அனுர தென்னக்கோன், இந்திய இளம் நட்சத்திர வீரர்...

தென்மாகாண முன்னாள் முதல்வரின் தனிப்பட்ட செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவின் தனிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்