7 ஆசனங்களை கைப்பற்றியது தமிழ் அரசு கட்சி: எம்.ஏ.சுமந்திரனும் எம்.பியாக வாய்ப்பு!

Date:

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி 7 ஆசனங்களை பெறுவது உறுதியாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அங்கு ஜேவிபி 1, முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. கோடீஸ்வரன் கட்சி சார்பில் அதிக விருப்பு வாக்கை பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி 1 ஆசனத்தை வென்றது. அங்கு எஸ்.குகதாசன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வன்னி மாவட்டத்திம் தமிழ் அரசு கட்சி 1 ஆசனத்தை வென்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலும் ஒரு ஆசனத்தை வென்றுள்ளது. யாழில் சிறிதரன் வெற்றியீட்டியுள்ளதாக ஊகிக்கப்படுகிறது.

தமிழ் அரசு கட்சி அதிக வாக்குகளை பெற்றுள்ளதால், அதற்கு தேசியப்பட்டியல் ஆசனம் ஒன்றும் கிடைக்கலாமென கருதப்படுகிறது. தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்தால் 8 ஆசனங்களை பெறும்.

அனைத்து மாவட்டங்களிலும் இம்முறை தமிழ் அரசு கட்சி வெற்றியீட்டியுள்ளது. யாழ்ப்பாண தொகுதியில் யாரும் வெற்றியீட்டவில்லை. இதனால், யாழ் தேர்தல் மாவட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன் வெற்றியீட்டவில்லையென்றால், யாழ் மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அவசியமென்ற அடிப்படையில், எம்.ஏ.சுமந்திரன் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்படலாமென ஊகிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

நாடு பூராகவும் சுகாதாரதுறையினர் 8 கோரிக்கைகளை முன்வைத்து 10 ம் திகதி தொடக்கம் போராட்டம்

இந்த வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு 8...

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை...

குட்டிமணி, தங்கதுரை சிலை விவகாரம் – சதீஸிடம் 3 மணி நேரம் விசாரணை!

வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸிடம் பயங்கரவாத தடுப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்