விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
லொஹான் ரத்வத்த நேற்று (02) இரவு ஏற்பட்ட அவசர நிலை காரணமாக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் அசெம்பிள் செய்யப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த 31ஆம் திகதி கைது செய்யப்பட்ட லொஹான் ரத்வத்த, நுகேகொடை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
லொஹான் ரத்வத்தவின் உடல்நிலை குறித்து அவதானம் செலுத்தி வைத்திய சிகிச்சைக்கு அனுப்புமாறு நீதவான் பரிந்துரைத்ததன் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.




