24.8 C
Jaffna
January 9, 2025
Pagetamil
இலங்கை

கங்கேசன்துறை- நாகை கப்பல் சேவை வாரத்தில் 5 நாட்களாக அதிகரிப்பு!

நாகப்பட்டினம் -காங்கேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து இனி வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி தமிழகத்தின் நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம், காங்கேசன்துறை இடையே சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவை தொடங்கியது. முதலில் தினந்தோறும் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் முன்பதிவு குறைவாக இருந்ததால் வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு மூன்று நாட்களாக குறைக்கப்பட்டு இயக்கப்பட்டது. அதன் பின்னர் சனிக்கிழமை உட்பட்ட 4 நாட்களாக நீட்டிக்கப்பட்டது. இது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று முன்பதிவும் அதிகரித்துள்ளது.

அதைத்தொடர்ந்து இனி வாரத்தில் 5 நாட்கள் கப்பலை இயக்க கப்பல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி பயணிகள் வசதிக்காக எதிர்வரும் 8ஆம் திகதி முதல் வெள்ளிக் கிழமைகளிலும் கப்பல் போக்குவரத்து சேவை இருக்கும் என ‘சிவகங்கை’ கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – ஐக்கிய தேசியக் கட்சி இணை நடவடிக்கைக்கு திட்டம்

east tamil

நாட்டில் போலி வைத்தியர்கள் அதிகரிப்பு – நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

எதிர்ப்புகளை புறக்கணித்து, மாற்றத்திற்கான பயணத்தில் அரசாங்கம்

east tamil

11 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

east tamil

“இந்தியாவிடம் முட்டை வாங்கி சீனாவுக்கு கோழி விற்பது நகைப்புக்குறியது” – சசிகுமார்

east tamil

Leave a Comment