விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பார்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (25) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அண்மையில் (23) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமான பதிவுசெய்யப்படாத மோட்டார் வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் காரணமாக நீதிமன்ற உத்தரவுக்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்தனர்; விளக்கமறியலின் பின்னர் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சாகர காரியவசமும் இன்று பிற்பகல் முன்னாள் அமைச்சரைப் பார்க்க வந்திருந்தார்.