முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய பஸ்நாயக்க தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகத்தின் முன்பகுதியில் தோட்டா புகுந்ததில் மூளை உள்ளிட்ட உள்ளுறுப்புகள் பலத்த சேதமடைந்துள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இது தற்கொலைச் செயல் என்பதை மருத்துவ அறிக்கைகள் மற்றும் சாட்சியங்கள் உறுதிப்படுத்துவதாகவும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (20) காலை பிரத்தியேக செயலாளர் தனது வீட்டிலிருந்து மஹய்யாவ ரத்வத்த பூர்வீக வீட்டிற்கு முச்சக்கர வண்டியில் வந்துள்ளார் என தெரியவந்ததையடுத்து, முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட ஒன்பது பேரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
பஸ்நாயக்கவின் மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரத்வத்தவின் வீட்டின் மூன்று வேலையாட்களும் வாக்குமூலங்களை வழங்கியவர்களில் அடங்குவர்.
சம்பவத்தின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரத்வத்த வீட்டில் இல்லாத காரணத்தினால் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.