பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் நாளை (23) வாக்குமூலம் வழங்கத் தயார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
பெர்னாண்டோவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையின் போதே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் ஆஜரான சட்டத்தரணி இந்த உறுதிமொழியை வழங்கினார்.