Pagetamil
இலங்கை

அரசியல் நோக்கம் கொண்ட அறிக்கையை அரசு ஏற்கவில்லை: அமைச்சர் விஜித ஹேரத்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொர்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.என்.ஜே.டி அல்விஸ் தலைமையிலான குழுவின் அறிக்கையை அரசு ஏற்காது என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கம் கொண்ட அறிக்கையென்பதையும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஓய்வுபெற்ற பொலிஸ் மன்றத்தில் இணைந்த பின்னர், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டிஐஜி) ரவி செனவிரத்ன மற்றும் முன்னாள் சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரை மட்டுமே இந்தக் குழு இலக்கு வைத்தது என்பதை சுட்டிக்காட்டினார்.

தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற காவல்துறை மன்றம் ஜூன் 09, 2024 அன்று உருவாக்கப்பட்டது என்றும், காவல்துறை மன்றம் உருவாக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜூன் 12, 2024 அன்று அந்தக் குழு நியமிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு சற்று முன்னர் செப்டம்பர் 15 ஆம் திகதி மூன்று மாதங்களுக்குள் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்ததாக அமைச்சர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இ-டிக்கெட் மோசடி- பொலிஸ் அதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்தம்

east tamil

கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு பணிகளை பார்வையிட்ட அமைச்சர்

Pagetamil

யாழில் அரசியல் பிரமுகர்களை சந்தித்த இந்திய தூதர்

Pagetamil

சுண்டிக்குளத்தில் கடற்படையினரால் மர்ம பொருள் மீட்பு

east tamil

கட்டைக்காட்டு பகுதியில் புதிதாக போடப்பட்ட 15 மின் விளக்குகள்

east tamil

Leave a Comment