ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் கூரிய ஆயுதங்களால் குத்தியும், அடித்தும் கொல்லப்பட்டு வீட்டினுள் எரிக்கப்பட்டுள்ளதாக ஹலவத்த தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் தொழிலதிபரான 51 வயதுடைய எஸ். சேனாரத்ன (தந்தை) 44 வயதான மஞ்சுளா நிரோஷனி பண்டார (தாய்) மற்றும் 15 வயது ஏ. நேத்மி நிமேஷா (மகள்) ஆகியோரே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றிருக்கலாம் என ஹலவத்த தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (20) காலை 6:00 மணியளவில், வீடு தீப்பிடித்து எரிவதாக ஹலவத்தை தலைமையக பொலிஸாருக்கு நபர் ஒருவர் அறிவித்ததையடுத்து, பொலிஸார் சென்று வீட்டினுள் எரிந்து கொண்டிருக்கும் சடலங்களை கண்டெடுத்துள்ளனர்.
பொலிஸாரின் மேலதிக விசாரணையில், சடலங்கள் கூரிய ஆயுதத்தால் அடித்து கழுத்தை அறுத்திருந்தது தெரியவந்துள்ளது.
இந்த மரணங்களுக்கான காரணத்தை இதுவரை பொலிஸார் வெளிப்படுத்தாத நிலையில் ஹலவத்தை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.