காசாவில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் குடும்பத்தினர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள் என குறிப்பிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 20) இஸ்ரேலால் சில வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு காசாவில் உள்ள ஒரு சுரங்கப்பாதை வழியாக தனது குடும்ப உறுப்பினர்களுடன் தனது உடைமைகளுடன் வெளியேறும் காட்சிகள் உள்ளன.
புதன்கிழமை (ஒக் 16) தெற்கு காஸா நகரமான ரஃபாவில் சின்வாரை, இஸ்ரேல் துருப்புக்கள் கொன்ற பிறகு இஸ்ரேல் இந்த காட்சிகளை வெளியிட்டது. வீடியோவில், சின்வார், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தொலைக்காட்சி, தண்ணீர், தலையணைகள் மற்றும் மெத்தைகள் உள்ளிட்ட தங்களின் தனிப்பட்ட உடமைகளை சுரங்கப்பாதை வழியாக மாற்றுவதைக் காணலாம்.
இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரியின் கூற்றுப்படி, கான் யூனிஸில் உள்ள அவர்களின் வீட்டிற்கு கீழே உள்ள சுரங்கப்பாதையில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.
பத்திரிக்கையாளர் சந்திப்பில், கழிப்பறைகள், குளியலறைகள் மற்றும் சமையலறை கொண்ட நிலத்தடி வளாகத்தின் புகைப்படங்களை ஹகாரி பகிர்ந்துள்ளார். சுரங்கப்பாதையில் சில பணம், உணவு மற்றும் ஆவணங்களையும் இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்தது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட காட்சிகளைக் காட்டி, யாஹ்யா சின்வாரின் மனைவி 32,000 டொலர் (சுமார் ரூ.93,42,416.00) மதிப்புள்ள கைப்பையை எடுத்துச் சென்றதாக இஸ்ரேல் கூறியது.
🎥DECLASSIFIED FOOTAGE:
Sinwar hours before the October 7 massacre: taking down his TV into his tunnel, hiding underneath his civilians, and preparing to watch his terrorists murder, kindap and rape. pic.twitter.com/wTAF9xAPLU
— LTC Nadav Shoshani (@LTC_Shoshani) October 19, 2024
“ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு முந்தைய நாள் இரவு சின்வாரின் மனைவி இந்தப் புகைப்படத்தில் பதிவாகியுள்ளார். $32,000 ஹெர்ம்ஸ் பர்கின் பையை மாட்டிக்கொண்டு செல்கிறார். ஹமாஸின் கீழ் காசா மக்கள் கஷ்டங்களை அனுபவித்த போது, சின்வாரும் அவரது குடும்பத்தினரும் வெட்கமின்றி ஆடம்பரமாக வாழ்ந்து, மற்றவர்களை இறக்க அனுப்பும் போது மகிழ்ந்தனர், ”என்று இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் நடத்தும் எக்ஸ் பக்கம் கூறுகிறது.
இந்த கூற்றை இஸ்ரேல் இரணுவத்தின் அரபு மொழி செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கேணல் அவிச்சே அட்ரே மீண்டும் மீண்டும் கூறினார். ஒருபுறம் சின்வாரின் குடும்பம் ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவித்து வருவதாகவும், மறுபுறம் காசா மக்கள் வறுமையில் தவிப்பதாகவும், பலரிடம் “உணவுக்குப் போதுமான பணம் இல்லை” என்றும் அவர் கூறினார்.
பலத்த காயமடைந்த சின்வார் ஆளில்லா விமானத்தை நோக்கி ஒரு பொருளை வீசியபோது அவரது கடைசி தருணங்களை கைப்பற்றிய ட்ரோன் காட்சிகளையும் இஸ்ரேல் வெளியிட்டது. பிரேத பரிசோதனையின் படி, சின்வார் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டதால் இறந்தார், மேலும் அவரது விரல்களில் ஒன்று துண்டிக்கப்பட்டது.