நடிகை ரம்யா பாண்டியனுக்கு நவம்பரில் திருமணம்!

Date:

நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா பயிற்சியாளர் லவல் தவானும் (Lovel Dhawan) நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அடுத்து ‘ஜோக்கர்’ படத்தில் ரசிகர்களின் பரவலான கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து, ‘ஆண் தேவதை’, ‘ராமே ஆண்டாலும், ராவண ஆண்டாலும்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், ‘குக் வித் கோமாளி’, ‘பிக்பாஸ்’ உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கவனம் பெற்றார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ரம்யா பாண்டியன் பெங்களூருவில் செயல்பட்டு வரும் யோகா மையத்தில் சேர்ந்தார். அங்கு பணியாற்றி வந்த யோகா மாஸ்டர் லவல் தவான் என்பவருடன் ரம்யா பாண்டியனுக்கு நல்ல நட்பு ஏற்பட்டு பின்பு, அது காதலாக மாறியது. இதன் நீட்சியாக இருவருக்கும் அவரவர் குடும்பத்தாரின் ஒப்புதலுடன் வரும் நவம்பர் 8ஆம் தேதி உத்தராகண்டில் உள்ள ரிஷிகேஷில் கோயில் ஒன்றில் திருமணம் நடைபெற உள்ளது. நவம்பர் 15-ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்