கேரதீவு- சங்குப்பிட்டி பாலத்தை பயன்படுத்துபவர்களிற்கான அறிவித்தல்

Date:

கேரதீவு – சங்குப்பிட்டிப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு / சேதம் காரணமாக உடனடியாக அவசர திருத்த வேலைகள் நடைபெறவுள்ளதால் இன்று (18) மு. ப 12.00 மணியிலிருந்து 03 நாட்களுக்கு இப் பாலத்தினூடாக கனரக வாகனங்களின் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அறிவித்துள்ளார்கள்.

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் சிற்றூர்தி சேவையில் பயணிக்கும் பயணிகள் மாத்திரம் பயணித்து சில இடங்களில் இறங்கி நடந்து செல்ல வேண்டிய தேவைப்பாடு உள்ளதாகவும், மேலும் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி நோயாளர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அறியத்தந்துள்ளார்.

மேலும், கனகர வாகனங்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் மாற்றுப் பாதையினை பயன்படுத்துமாறும், பாதைக்கான திருத்த வேலைகள் விரைவாக பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் குறித்த தினத்திற்கு முன்னர் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து!

கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00...

வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக்...

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா மறைவு

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்