பாடசாலையில் கெஹலியவின் பெயரை நீக்க அனுமதி

Date:

கண்டி வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை பிரிவிலுள்ள ‘கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலை’ என உடனடியாக பெயர் மாற்றம் செய்வதற்கு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபயகோன் நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

கண்டியில் உள்ள பாடசாலைகளில் ஊழல் அரசியல்வாதிகளின் பெயர்களை நீக்குமாறு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து மாகாண கல்வி திணைக்களத்தின் கட்டமைப்பு குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இப்பாடசாலை இனி குண்டசாலை அரச ஆரம்பப் பாடசாலை என அழைக்கப்படும்.

இதேவேளை, மினிபே கல்வி வலயமான தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் பெயரை மாற்றவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கல்வி அமைச்சின் 1996 ஆம் ஆண்டு சுற்றறிக்கையில் உயிருடன் இருக்கும் நபர்களின் பெயரை பாடசாலைகளுக்கு வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் கொள்முதல் ஊழலில் கெஹலிய ரம்புக்வெல்ல ஈடுபட்டிருந்த போதிலும், அவரது பெயரை பாடசாலைக்கு வைத்திருப்பது பொருத்தமற்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள்...

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்