தமிழில் ‘தடையற தாக்க’, ‘என்னமோ ஏதோ’, ‘ஸ்பைடர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, சமீபத்தில் வெளியான ‘இந்தியன் 2’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது அஜய் தேவ்கன் மற்றும் ஆர். மாதவனுடன் ‘தே தே பியார் தே 2’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஜிம்மில் 80 கிலோ எடையை தூக்கும் போது பலத்த காயம் அடைந்தள்ளார். வழக்கமாகக் குனிந்து அதிகமான எடையைத் தூக்கும்போது இடுப்பு பெல்ட் அணிவது வழக்கம். ஆனால், ரகுல் ப்ரீத் சிங், பெல்ட் அணியாமல் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த எடையைத் தூக்கியுள்ளார். இதனால் அவர் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
“முதல் இரண்டு நாட்கள் கடுமையான வலியால் ரகுல் துடித்தார். இப்போது ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் முழுவதுவமாக குணமடைவார்” என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.