யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சையாக களமிறங்கும் சனநாயக தமிழரசு கட்சி இன்று மாலை நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் பொழுது ஆதீனகுரு முதல்வரிடம் சனநாயக தமிழரசு கட்சியின் உருவாக்கபட்டதன் நோக்கம் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
குறித்த சந்திப்புகளில் வேட்பாளர்களான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், வடக்கு மாகாண முன்னாள் விவசாயதுறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், நாவலன், விமலேஸ்வரி, குணாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் அதிருப்தி அடைந்த குழுவினர் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சனநாயக தமிழ் அரசு கூட்டமைப்பு என்ற பெயரில் சுயேட்சையாக மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.