30.9 C
Jaffna
April 29, 2025
Pagetamil
இலங்கை

வாகன இறக்குமதிக்கான பரிந்துரைகளை மத்திய வங்கி சமர்ப்பித்துள்ளது!

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்புகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி நிதி அமைச்சுக்கு தேவையான பரிந்துரைகளை வழங்கியுள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

2022 இல், இலங்கை வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. அப்போது, ​​வாகனங்கள் உட்பட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு அப்போதைய அரசு இறக்குமதி கட்டுப்பாடு விதித்தது.

ஆனால் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, பல பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதித்தது. அதன்படி, தடையின்றி இறக்குமதியை அனுமதிக்கும் வகையில் இறுதி தளர்வு இருக்க வேண்டும். இதன்படி, வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான பூரண அனுமதியை அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்திற்குள் வழங்குவதற்கு முன்னைய அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது.

இலங்கை மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அந்த தீர்மானத்தில் தற்போது மாற்றம் ஏற்படுமா என மத்திய வங்கி ஆளுநரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு இருப்புக்களை பாதிக்காத வகையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான பரிந்துரைகளை திறைசேரிக்கு ஏற்கனவே வழங்கியுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

ஆனால் அவ்வாறு வாகன இறக்குமதியை அனுமதிப்பது குறித்து நிதியமைச்சு முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு!

Pagetamil

கனடா பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழர்கள்

Pagetamil

பல் வைத்தியரின் வாயில் வெடித்த சீனப்பட்டாசு!

Pagetamil

மஹிந்த பாணியிலேயே அனுர அரசும்!

Pagetamil

கடந்த அரசுகளுக்கும் ஜேவிபிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை: ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது!

Pagetamil

Leave a Comment