மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் சின்னத்தட்டுமுனையில் நேற்று முன்தினம் இரவு (6) இடம்பெற்ற இடியுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள்; சில உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்
சின்னத் தட்டுமுனை கால்நடை பண்ணையாளரின் மாடுகள் ஆற்றை அண்மித்த பகுதியில் மேச்சலுக்காக கட்டப்படுவது வழக்கமாகும்.
நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்கத்தின் காரணமாக அவற்றுள் 4 மாடுகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளன. அத்துடன் வாழைச்சேனையில் பல பகுதிகளில் உள்ள வீடுகளில் மின்சாரப் பொருட்கள் பல சேதமடைந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.
கிழக்கில் தற்போது பருவபெயர்ச்சி மழை காலம் ஆரம்பித்துள்ளது.
இதனால் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
– க.ருத்திரன்.-