தமிழரசுக் கட்சியின் பெண் வேட்பாளர் தெரிவில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள தமிழரசு மகளீர் அணியினர் சுமந்திரன் தெடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் மகளீர் அணியின் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து யாழ் ஊடக அமையத்தில் நேற்று ஊடக சந்திப்பொன்றை நடாத்தி இருந்தனர்.
இதன் போது கட்சியின் யாழ் மாவட்ட மகளீர் அணி தலைவி மதனிநெல்சன் தெரிவித்ததாவது-
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர் தெரிவில் கட்சியின் மகளீர் அணிக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
உண்மையில் எதற்காக இவ்வாறான தெரிவுகளை செய்தார்கள் என்ற சந்தேகமும் கேள்வியும் இருக்கிறது. இந்த பெண் வேட்பாளர் தெரிவு சர்வாதிகாரமான முறையிலே நடைபெற்றிருக்கிறது. இதனால் கட்சியில் உள்ள பெண்கள் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் யாழில் போட்டியிடுவதற்காக மகளீர் அணியில் இருக்கிற ஐந்து பேர் இரண்டு கிழமைக்கு முன்னதாகவே விண்ணப்பித்து இருந்தனர்.
ஆனால் வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சுமந்திரன் பெண்கள் விண்ணப்பிக்கவில்லை என்றும் காடுள் மலைகள் மேடுகள் பள்ளங்கள் என பல இடங்களிலும் பெண்களை தேடுவதாக தனது பாணியில் கிண்டலாக சொல்லியிருந்தார்.
ஆனால் 5 ஆம் திகதி பெண்கள் விண்ணப்பிக்கவில்லை என்றவர் மறுநாள் 6 ஆம் திகதி இரண்டு பெண்கள் விண்ணப்பித்து அவர்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறுகிறார். உண்மையில் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் விண்ணப்பித்தவர்களை மறைத்து யாரும் விண்ணப்பிக்கவில்லை எனச் சொன்னவர் திடீரென இருவர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களை தெரிவு செய்துள்ளதாகவும் கூறுகிறார்.
ஆகவே எதற்காக அவர் உண்மையை சொல்லாமல் பொய் சொல்லுகிறார். இவ்வாறாக அவரின் பொய்களை கேட்கவோ சர்வாதிகாரத்துடன் அவர் செயற்பட்டு வருவதையோ அனுமதிக்கவோ நாங்கள் தயாராக இல்லை.
எங்களில் பல பேர் போட்டியிட விண்ணப்பித்து ஈருக்கையில் அதனை மறைத்துவிட்டு தனக்கு துதி பாடுபவர்களை நிறுத்தி உள்ளார். ஆக முதலில் விண்ணப்பித்த நாங்கள் யார். இப்ப சுமந்திரன் தெரிவு செய்த இருவரும் யார். எந்த அடிப்படையில் அவர்களை தெரிவு செய்தார்.
ஆக மொத்தத்தில் தனக்கு துதி பாடுபவர்களை தானே நிறுத்திவிட்டு இப்ப ஆளுமை மிக்க பெண்கள் என புளுடா விடுகிறார். ஆக இந்த பருப்பு எல்லாம இனி வேகாது.
வெறுமனே அடாவடிதனமாக சர்வாதிகாரத்துடன் தான் செயற்படுவதால் மற்றவர்களை முட்டாள்கள் மடையர்கள் என நினைக்ககூடாது. இவ்வாறு எல்லாத்துக்கும் தனித்து ஒற்றையாளாக முடிவெடுகிற அவரது ஆட்டம் முடியும்.
இந்த இரு பெண் வேட்பாளர்களின் தெரிவு என்பது தன்னிச்சையாக சுமந்திரனால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதற்கு யாருடைய ஒப்புதலும் இன்றி தனக்கு துதி பாடுபவர்கள் தனது வாக்கு வங்கிக்காக தெரிவு செய்துள்ளார்.
எங்கள் யாருக்கும் தெரியாமல் திருட்டு தனமாக இந்த இருவரையும் நியமித்துள்ளார். முன்னர் விண்ணபித்தவர்களை புறந்தள்ளி தனக்கு துதி பாடிக்கொண்டு தன்னோடு பயணிக்க கூடிய இரண்டு கொத்தடிமைகளை தனக்காக நியமித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் மகளீர் அணியை சேர்ந்த முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நாகரஞ்சினி ஜங்கரன் தெரிவிக்கையில்-
கட்சியின் மகளீர் அணி என்றதொரு கட்டமைப்பு உள்ளது. அந்த கட்டமைப்பின் ஊடாக எங்களில் பலரும் விண்ணப்பித்து இருக்கிற நிலைமையில் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்று பொய்யை சொல்லி உள்ளார்.
உண்மையை மறைத்து பொய் கூற காரணம் என்ன? தனக்கு துதி பாடியவர்களையும் தொடர்ந்து பாடுபவர்களையும் அவர் நியமித்துள்ளார். நாங்கள் பாராளுமன்றம் மாகாண சபை பிரதேச சபை என வேட்பாளர்களை தெரிவு செய்து வைத்துள்ளோம்.
கட்சியில் பெண்களை போட வேண்டும். பெண்கள் வர வேண்டும் என்று செல்பவர்கள் கட்சியில் இருக்கிற பெண்கள் முன்வந்தாலும் இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தங்களுக்கு தேவையானவர்களை தெரிவு செய்கின்றனர்.
தமிழரசின் மகளீர் அணிச் செயலாளர் றஜனி ஜெயபிரகாஸ்
தெரிவிக்கையில்-
வடகிழக்கில் விண்ணபித்தும் பரீசிலிக்கபட்டதைபற்றி பேசாமல் காடுமேடு தேடிதிரிவதாகவும். தனக்கு சங்கு ஊதி துதுபாடுபவர்கள் எங்கே இருந்து கோண்டுவந்து நிறுத்தினாலும் எல்லோரும் அதற்கு இனங்க வேண்டுமாம்.
மட்டக்களப்பில் நானும் சில தினங்களுக்கு முன்னர் விண்ணப்பித்தும் அது தொடர்பில் எனக்கு எந்தவித தகவலும் வழங்கப்படவில்லை.நானும் மட்டகளப்பில் அனுப்பினேன். இன்றுவரை அந்த விண்ணப்பம் சரிபார்க்கபட்டதா பூர்த்தி செய்யப்பட்டதா என்பது பரமரகசியமாக உள்ளது.
பாரம்பரிய கட்சியான தமிழரசில் நீண்டகாலமாக பயணித்து வரும் நாங்கள் இருக்கையில் கட்சிக்குள்ளிருந்து புதிதாக புதியவர்களை கொண்டு வருவதன் பின்னனி என்ன. தேர்தலில் போட்டியிட எங்களுக்கு என்ன ஆளுமை இல்லை என் சுமந்திரன் கூறுகிறார்.
பெண்கள் தான் கண்கள் என்றும் அவர்களை கௌரவபடுதுகிறோம்
என வாய் கூசாமல் பொய்சொல்வார்கள்.
இதேவேனை யாழில் தான் நினைத்ததை செய்துவிட்டு இருக்கிறது போல கிழக்கிலும் விண்ணப்பித்தவர்களை தெரிவு செய்யாமல் தனக்கு வேண்டியவர்களை நியமிப்பதற்காக பெண் பாரக்கும் படலம் தொடர்கிறது. எல்லாமே ஏமாற்று வித்தைதான்.
தமிழரசு மகளீர் அணியை சேர்ந்த விமலேஸ்வரி தெரிவிக்கையில்-
தமிழரசு கட்சியில் புதிதாக இருவருக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர் நியமனம் வழங்கப்பட்ட இவர்கள் யார் என கட்சியின் மகளீரனி தலைவரிடம் கேட்ட போது இவர்களை தான் சுமந்திரன் கடலோடு காற்றோடு காடுகளோடு எல்லாம் தேடி கொண்டு வந்திருந்த பொந்துக்குள் இருந்த இரண்டு நண்டுகள் என்றார்.
அப்படி அவர் கொண்டுவந்த இருவரும் பெண்கள் என்றால் நாங்கள் யார். உங்களோடு பயணிப்பவர்கள் நாங்கள் உதைச் செய்தாலும் ஆமாப் போட்டு தலையாட்டுவார்கள். ஆனால் எங்களால் இப்படி தலயாட்டி பொய் சொல்ல முடியாது.
ஆகையினால் தான் விரும்பியவர்களை தனக்கு வேண்டப் பட்டவர்களை தன்னிச்சையாக தெரிவு செய்கிறார். ஆனால் இது சர்வாதிகாரமான கட்சி கிடையாது. இது ஒரு ஐனநாயக கட்சி. இங்கு எல்லாம் சரியான முறையில் நடைபெற வேண்டும். ஆனால் எல்லாமே யாரு ஒருவரின் விருப்புபடி தான் இப்ப நடக்கிறது.
இப்படியாக தனக்கு வேண்டாதவர்களை நியமிக்காது தனக்குச் சார்பானவர்களை நியமித்து வருகிற சுமந்திரன் தமிழரசின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறிதரனுக்கு மட்டும் பலத்த இழுபறியின் பின்னர் கொடுத்திருக்கிறார். அதுவும் தன்னுடைய ஆட்கள் அனைவருக்கும் கொடுத்துவிட்டு தனியே சிறிதரனுக்கு மட்டும் கொடுத்துள்ளார்.
சுமந்திரன் அடாவடிதனமாக சர்வாதிகீர போக்கில் நடப்பதால் அதற்குள் போய் சிக்க வேண்டீமென மாவை சேனாதிராசா கூறியும் சிறிதரன் தனக்கான வேட்பாளர் நியமனத்தை பெற்றிருக்கிறார். இப்போது அவர் தனித்து விடப்பட்டுள்ள நிலையில் அவர் அதிலிருந்து விலகி வர வேண்டும்.
எங்களை எல்லாம் விண்ணப்பிக்க சொல்லியதே சிறிதரன் தான். ஆனால் அவரே உங்களுக்கு நியமனம் மறுக்கப்பட்ட போது குரல் கொடுக்கவில்லை. ஏன் மௌனம் காக்கிறார்.
ஆனாலும் எங்கிருந்தாலும் சிறிதரன் வெல்லுவார். அவர் பத்தாம் திகதிக்கு முன்னர் தமிழரசின் வேட்பாளர் பட்டியலில் இருந்து வெளியே வந்தால் நாங்கள் அவரை வெல்ல வைப்போம். அவரை தலைவராக்கவும் உழைத்தவர்கள் நாங்கள் தான். சிறிதரனை ஏன் வெளியே வர சொல்லுகிறோம் என்றால் உண்மையில் எங்கு எதிலும் நின்றாலும் இவர் வெல்வார். ஆனால் அவரூடாக வருகிற தேசியப்பட்டியலை எடுத்து கொண்டு சுமந்திரன் சென்று விட கூடாது.
மேலும் தமிழரசிற்குள் தற்போது சுமந்திரனின் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. இந்த இரண்டு பேரையும் எப்படி நிருபித்தார் சுமந்திரன் என்ன அடிப்படையில் நிரூபணம் செய்தார் என்ற பதிலை சொல்லல வேண்டும்.
ஏமாற்று வித்தைகள் வேண்டாம். கட்சியை பற்றி அறியாத இருவரை தங்களுக்கு வாக்குக்காக கொண்டு வந்துள்ளார். பெண்களை அடிமைத்தனமாக்குகிற செயற்பாடுகளை நிறுத்துவோம்.