26.1 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இலங்கை

இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகுகிறார் சசிகலா: யாழில் தேர்தலில் களமிறங்குகிறார்!

இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலக, சசிகலா ரவிராஜ் தீர்மானித்துள்ளார். இதற்கான அறிவிப்பை நாளை (7) வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் சசிகலா ரவிராஜின் பெயர் சேர்க்கப்படவில்லை. தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் தெரிவுகுழுவில், எம்.ஏ.சுமந்திரன் ஆதரவாளர்களே பெருமளவில் உள்ள நிலையில், எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு தரப்பினரே வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். எம்.ஏ.சுமந்திரனை ஆதரித்து பேஸ்புக்கில் பதிவிடும் பெண்ணுக்கும் யாழ்ப்பாண வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கியது பல தரப்பினாலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் அரசு கட்சியின் இந்த செயற்பாடுகளால் அதிருப்தியடைந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, கட்சியை விட்டு விலகுவதாக இன்று அறிவித்தார்.

சசிகலா ரவிராஜ் கட்சியை விட்டு விலகும் முடிவை நாளை காலை அறிவிப்பார் என தமிழ்பக்கம் அறிந்தது.

அவர் எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். எந்த கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்ட விபரங்களை சசிகலா நாளை அறிவிப்பார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மோப்ப நாய்களுடன் கிளிநொச்சிப் பொலிசார் வீதிச் சோதனை

Pagetamil

வேலணை மக்களுக்கு அதிர்ச்சிச் செய்தி: 24 மணித்தியால மருத்துவ சேவை தடைப்படும் அபாயம்!

Pagetamil

ஐயப்பன் பக்தர்களுடன் பிரதமர் ஹரிணியை சந்தித்தார் செல்வம் அடைக்கலநாதன்

Pagetamil

கொதித்தெழுந்த சிவாஜி!

Pagetamil

யாழில் வீதிக்கு வந்த முதலைக்கு நேர்ந்த பரிதாபம்

Pagetamil

Leave a Comment