யுக்திய நடவடிக்கையில் தவறாக கைவிலங்கிட்டவரிடம் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய பொலிசார்!

Date:

யுக்திய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட வேண்டிய நபராக தவறாகக் கருதி, சட்டத்தரணி ஒருவரின் சாரதியை வீதியில் வைத்து கைவிலங்கிட்டு விசாரணை செய்ததற்காக சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று (03) உயர் நீதிமன்றத்தில் வைத்து மனுதாரரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளனர்.

களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த செல்வராஜ் ராஜபாண்டியினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மகிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் திஸாநாயக்க, பொலிஸ் கான்ஸ்டபிள்களான ரத்னசிறி, சேனாதிர மற்றும் நாணயக்கார ஆகியோர் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினர்.

கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்திலிருந்து வாகனத்தில் திரும்பிய போது மோட்டார் சைக்கிள்களில் சிவில் உடையில் வந்த சிலர் வீதிக்கு முன்னால் வாகனத்தை நிறுத்தியதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் காவல்துறையில் இருந்து வருகிறோம்” என்று சிவில் உடையில் இருந்த குழுவினர் தன்னைத் சோதனை செய்து, கைவிலங்கிட்டு, வலது கையில் பச்சை குத்தப்பட்டுள்ளதா? என்று சோதித்ததாக மனுதாரர் கூறினார். வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர், நிலைமை குறித்து சட்டத்தரணிக்கு தெரிவிக்க முற்பட்ட போது, அவரது கையடக்க தெலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவர் கையில் பச்சை குத்தப்படவில்லை என்பதை உறுதி செய்த பின்னர், “அவரல்ல… தவறு” என்று கூறிவிட்டு குழு வெளியேறியதாகவும் மனுதாரர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது இந்த உத்தியோகத்தர்கள் நீர்கொழும்பு பொலிஸாருடன் இணைந்த குழு என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அதன் பிரகாரம் இந்த அடிப்படை உரிமை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். அவரது மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், SDIG பிரியந்த வீரசூரிய மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் மா அதிபர் பிரதீப் வீரசிங்க ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் பிரதிவாதிகளான பொலிஸ் அதிகாரிகள் தமது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பு வழங்குமாறு கோரி மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

2025/26இல் ரூ.200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

2025/26 காலத்தில் ரூ. 200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்: அமைச்சர்...

பிரான்ஸில் முதல் எபோலா நோயாளர் உறுதி

காங்கோவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய எபோலா பரவலின் பின்னணியில், பிரான்ஸில் முதல் எபோலா...

**கோட்டாபயவின் ரிட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 6க்கு ஒத்திவைப்பு**

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்