26.3 C
Jaffna
December 30, 2024
Pagetamil
குற்றம்

ஆணுறுப்பை வெட்டி மேசையில் வைத்துவிட்டு உயிர்மாய்த்த இளைஞன்!

இருபத்தி ஆறு வயதுடைய திருமணமாகாத இளைஞன், தனது ஆணுறுப்பை வெட்டி வீட்டு மேசையில் வைத்து விட்டு, தனது மரணத்தில் வேறு எவருக்கும் தொடர்பில்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு, தூக்கில் தொங்கிய சம்பவம் தொடர்பில் ஹபரணை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹபரணை, திருகோணமலை வீதியில் ஹபரணை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் நடந்தது.

இவர் நேற்று முன்தினம் (02) காலை 11.30 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடந்த 1ஆம் திகதி பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக சென்ற அவர், சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், மறுநாள் (2ஆம் திகதி) தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது தந்தை ஹபரணை பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் தாயாரும் மன உளைச்சலுக்கு ஆளானவர் எனவும் தந்தை பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதிக வலி காரணமாக இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

15 வயது காதலியை ஏமாற்றி சீரழித்த காதலன் கைது!

Pagetamil

4 வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்த 2வது கணவன்!

Pagetamil

வடமராட்சியில் 12 சைக்கிள் திருடிய எமகாதகன் கைது!

Pagetamil

Leave a Comment