போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமான பிஎம்டபிள்யூ வாகனம் தொடர்பாக பியுமி ஹன்சமாலியிடம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (பிஎன்டி) விசாரணை நடத்த உள்ளது. நேற்றைய தினம் (3) இடம்பெற்ற தேவையான சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து இன்று அல்லது நாளை இந்த விசாரணை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பியுமி ஹன்சமாலியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட BMW வாகனம், கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, பொலிஸாருக்கு டிமிக்கி விட்டுக் கொண்டிருந்த போதைப்பொருள் கடத்தல்காரரின் கொழும்பில் உள்ள ஒரு வீட்டின் கராஜில் கண்டுபிடிக்கப்பட்டது.
வாகனம் தனது பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அது தான்னால் விற்கப்பட்டதாக பியுமி ஹன்சமாலி கூறியுள்ளார். இந்த விவகாரம் மேலும் விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டது. விரிவான விசாரணைகளின் போது, பல குறிப்பிடத்தக்க தகவல்கள் வெளிவந்துள்ளன, மேலும் இது குறித்து அவரிடம் விசாரிக்கப்பட உள்ளதாக ஒரு மூத்த காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தினார்.
கூடுதலாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பல அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் உட்பட போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமான பல சொத்துக்களை கண்டுபிடித்துள்ளனர். இதில் பியுமி ஹன்சமாலியின் பெயரில் பிஎம்டபிள்யூ பதிவு செய்யப்பட்டுள்ளது என மூத்த PND அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும் என்றும், ஹன்சமாலியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட BMW காரின் உண்மையான உரிமையாளரை கண்டறிய விசாரணைகள் தொடரும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.