27.4 C
Jaffna
November 9, 2024
Pagetamil
இலங்கை

யாழில் காணி விற்ற வெளிநாட்டுக்காரரின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் கைது!

காணியை விற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜையின் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் பணம் I iPhone 14 PROMAX கைத்தொலைபேசி, மற்றும் கடவுச்சீட்டு என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் இருவரை கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கீழுள்ள பொலிஸ் குழுவினர் ஊரெழுப்பகுதியில் வைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சண்டிலிப்பாய் பகுதியில் வைத்து இந்த இந்த துணிகர சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.

பணத்தை பறி கொடுத்தவர் சேந்தாங்குளம் பகுதியில் காணியை விற்றுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்களையும் சான்று பொருட்களையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மின் கட்டணம் 30 வீதத்திற்கு மேல் குறைக்கப்படும்

Pagetamil

ட்ரம்ப் கொலை முயற்சி, இலங்கை தாக்குதல் முயற்சிக்கு ஒருவரே சூத்திரதாரி

Pagetamil

13,14ஆம் திகதிகளில் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை

Pagetamil

சசிகலா ரவிராஜ் தொடர்பான போலி சுவரொட்டிகள்

Pagetamil

மாணவர்களுக்கும் தெரிந்த விடயங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு தெரியவில்லை!

Pagetamil

Leave a Comment