முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் மரணம் 2022 மே 9 ஆம் திகதி ஏற்பட்ட குழப்பத்தின் போது ஏற்பட்ட காயங்களினால் ஏற்பட்டதாக முன்னாள் எம்.பி. பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
“2022 மே 9 ஆம் திகதி அரகலயவை ஆரம்பித்தவர்கள் அவரை கடுமையாக தாக்கியதில் வெல்கமவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. வெல்கமவுக்கு ஆறகலயவின் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவ்வப்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கமவின் இறுதிநிகழ்வில் கலந்து கொண்டு உரையற்றிய பியல் நிஷாந்த தனது உரையின் போது தெரிவித்தார்.
முன்னாள் எம்.பி. குமார வெல்கம, 2022 மே 9 அன்று தாக்குதலுக்கு உள்ளான நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1