குடிவரவு குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நாயகமாக பீ.எம்.டீ.நிலூசா பாலசூரிய

Date:

குடிவரவு குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நாயகமாக பீ.எம்.டீ.நிலூசா பாலசூரியவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்த அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு-

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு தலைமையதிபதியாகப் பணியாற்றிய ஐ.எஸ்.எச்.ஜே.இலுக்பிட்டிய அவர்கள் 2024.09.25 ஆம் திகதி தொடக்கம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தடுப்புக் காவலில் இருப்பதால், குறித்த பதவியில் பணிகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக பொருத்தமான அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டியுள்ளது.

அதற்கமைய, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக தற்போது கடமையாற்றி வருகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர உத்தியோகத்தரான பீ.எம்.டீ.நிலூசா பாலசூரிய அவர்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு தலைமையதிபதி பதவிக்கு பதில் கடமைக்குநியமிப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்