மும்பை அருகே போலி பாஸ்போர்டில் தங்கி இருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகை கைது செய்யப்பட்டார்.
மும்பையில் ஏராளமான பங்களாதேஷ் பிரஜைகள் சட்டவிரோதமாக தங்கி இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இந்திய பிரஜைகள் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்திய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் பாஸ்போர்டு போன்றவற்றை சட்டவிரோதமாக எடுத்து வைத்துள்ளனர்.
மும்பை போலீஸார் அடிக்கடி ரெய்டு நடத்தி சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பங்களாதேஷ் பிரஜைகளை பிடித்து அவர்களது நாட்டிற்கு அனுப்பி வருகின்றனர். மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் நகரில் பங்களாதேஷ் குடும்பம் ஒன்று சட்டவிரோதமாக வசிப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அது குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர்.
இதில் ஆபாசப்பட உலகில் ஆரோஹி பர்டே மற்றும் பன்னா ஷேக் என்று அழைக்கப்படும் பங்களாதேசை சேர்ந்த நடிகை ரியா பார்டே போலி பாஸ்போர்ட்டில் தங்கி இருப்பது தெரிய வந்தது. அவர் பங்களாதேஷில் ஆபாச படங்களில் நடித்து வந்தவர் என்றும் தெரிய வந்தது.
22 வயதான ரியாவை கைது செய்து விசாரித்த போது அவருக்கு அமராவதியை சேர்ந்த ஒருவர் போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்துள்ளார். ரியா மட்டுமல்லாது மேலும் நான்கு பேருக்கு இது போன்று போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்துள்ளார். அந்த நான்கு பேர் எங்கு இருக்கின்றனர் என்பது குறித்து போலீஸார் தேடி வருகின்றனர்.
ரியாவின் பெற்றோர் கத்தாரில் இருக்கின்றனர். ரியா பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா தயாரிக்த்த ஆபாசப் படங்களில் நடித்து வந்ததாக தெரிகிறது. ராஜ்குந்த்ராவும் கொரோனா காலத்தில் ஆபாச படங்களை தயாரித்து ஒ.டி.டி.தளங்கள் மற்றும் மொபைல் ஆப்களில் வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட ரியா இதற்கு முன்பு விபசார வழக்கிலும் மும்பை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரியாவின் தாயார் அமராவதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கை விசாரித்த சப்-இன்ஸ்பெக்டர் சங்ராம் மால்கர், ரியாவின் தாய் தனது இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன் இந்தியா வந்துள்ளார். போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளார். அமராவதியைச் சேர்ந்த அரவிந்த் பர்டே என்பவரை மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி திருமணம் செய்து கொண்டார். அவர் தனது மற்றும் தனது குழந்தைகளின் போலி பிறப்புச் சான்றிதழ்களை அளித்து தனது குடும்பத்திற்கான பாஸ்போர்ட்டைப் பெற்றார்.
ரியாவின் தாய் அஞ்சலி பர்டே, ரூபி ஷேக், தந்தை அரவிந்த் பர்டே, சகோதரர் ரவீந்திரன், ரியாஸ் ஷேக், சகோதரி ரிது, மோனி ஷேக் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ரியாவின் தாயும் தந்தையும் தற்போது கத்தாரில் வசிக்கின்றனர். ரியாவின் சகோதரர் மற்றும் சகோதரியை போலீசார் தேடி வருகின்றனர்.