26.7 C
Jaffna
March 11, 2025
Pagetamil
இலங்கை

வடக்கு ஆளுனர் சொன்ன கதை

ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநராக இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் நாகலிங்கம் வேதநாயகன் ஊடகங்களை கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதியால் நாம் எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செல்வதற்குரிய ஒருவர் என்பதை தெரிவிப்பதோடு இவர் ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் இந்த பதவியை பெற்றுக் கொள்கிறேன்.

மேலும் இந்த இடத்தில் வேறு எந்த ஜனாதிபதி வந்திருந்தாலும் இந்த பதவி எனக்கு கிடைத்திருக்கவும் மாட்டாது வேறொருவர் எனக்குப் பதவியை தந்திருந்தாலும் நான் இதனை ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன் என்றும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.

மிகவும் எளிமையான முறையில் இன்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார் இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர்கள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட பின்னர், எம்.ஏ.சுமந்திரனின் சிபாரிசில் வடக்கு ஆளுனர் நியமிக்கப்பட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

சண்டித்தனத்தில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!

Pagetamil

பாராளுமன்றத்திலிருந்து விலகி பெண்ணுக்கு வழிவிடப் போகிறேன்!

Pagetamil

Leave a Comment