27.4 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இலங்கை

யாழ்ப்பாணத்தில் பிக்மீ முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் பிக்மீ முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான சாரதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதிலும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில்,

யாழ். போதனா வைத்திய சாலை முன்பாக நபர் ஒருவர், பிக்மீ அப்ஸ் மூலம், முச்சக்கர வண்டி சேவையை நாடிய போது, அவ்விடத்திற்கு சென்ற என்னை, முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி சாரதி, சேவையை நாடிய நபரை என்னை ஏற்ற விடாது தடுத்து என் மீது தாக்குதல் நடத்தினார்.

என் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன். முறைப்பாட்டின் பிரகாரம் தாக்குதலாளியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, அவர் முன்னாடி விசாரணைகளை மேற் கொண்ட பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் என்னை ஏசி, தாக்குதலாளிக்கு சார்பாக நடந்து கொண்டார்.

தாக்குதலாளியும், குறித்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் முன்பாக என்னை வெட்டுவேன் என மிரட்டினார்.

அதனால் நான் பொலிஸ் நிலையத்தில் இருந்து, வெளியேறி விட்டேன். இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளேன் என தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

சட்ட விரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்ட மூவர் கைது

east tamil

மோப்ப நாய்களுடன் கிளிநொச்சிப் பொலிசார் வீதிச் சோதனை

Pagetamil

வேலணை மக்களுக்கு அதிர்ச்சிச் செய்தி: 24 மணித்தியால மருத்துவ சேவை தடைப்படும் அபாயம்!

Pagetamil

ஐயப்பன் பக்தர்களுடன் பிரதமர் ஹரிணியை சந்தித்தார் செல்வம் அடைக்கலநாதன்

Pagetamil

கொதித்தெழுந்த சிவாஜி!

Pagetamil

Leave a Comment