26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

3 எம்.பிக்களின் உறுப்புரிமையை இடைநிறுத்தியது பெரமுன!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பவித்ராதேவி வன்னியாராச்சி மற்றும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 29ஆம் திகதி நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் அரசியல் சபைக் கூட்டத்தில் அக்கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்திற்கு எதிராக வேறொரு வேட்பாளரை ஆதரித்தமைக்காக அவர்களது கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கட்சியின் அகில இலங்கைக் நிறைவேற்றுக் குழு, செயற்குழு, அரசியல் குழு உறுப்புரிமை மற்றும் கட்சியின் தேசிய அழைப்பாளர் பதவி ஆகியவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

Leave a Comment