ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று காலை டுபாய் சென்றுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
பசில் ராஜபக்ஷ இன்று காலை எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் சென்றுள்ளார்.
பணம் செலுத்தி, விசேட வசதியை பயன்படுத்தி அவர் வெளியேறியுள்ளார்.
பசில் ராஜபக்ச டுபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வார் என்றும், அமெரிக்கா செல்வதற்கு அவர் எப்போதும் இந்த விமானப் பாதையையே பயன்படுத்துவார் என்றும் கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
கோட்டாவை ஜனாதிபதி பதவியிலிருந்து நாட்டு மக்கள் விரட்டிய போது, ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சக்களை சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாத்தார் என்ற விமர்சனமுள்ளது. தற்போது ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்கு முன்னதாக பசில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1