துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுர்த்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடிய குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அம்பன் குடத்தனையைச் சேர்ந்த கந்தசாமி வினோகரன் (54) என்பவராவார்.
நேற்று (17) செவ்வாய்க்கிழமை வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுர்த்திரத் தீர்த்தம் இடம்பெற்றது.
வல்லிபுர ஆழ்வார் தீர்த்தம் ஆடியதன் பின்னர் கடலில் குளித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கிய நிலையில், நோயாளர் காவு வண்டி ஊடாக பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.
சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை மொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1