26.7 C
Jaffna
January 5, 2025
Pagetamil
இலங்கை

பொதுவேட்பாளர் கூட்டங்களுக்கும் பணம் கொடுத்து அழைத்துச் செல்லப்படும் மக்கள்!

தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கு ஆதரவாக நடத்தப்படும் பிரச்சாரக் கூட்டங்களுக்கு, பணம் கொடுத்து ஆட்கள் அழைத்துச செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பணம் கொடுத்து மக்களை பிரச்சாரக் கூட்டங்களுக்கு அழைத்து செல்லும் மோசமான கலாச்சாரத்தை தென்னிலங்கை பிரதான கட்சிகள் ஆரம்பித்திருந்தாலும், வடக்கில் ஈ.பி.டி.பி, அங்கயன் இராமநாதன் தரப்பு போன்றவையே மேற்கொண்டு வந்தன.

அண்மைய நாட்களில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பிரச்சார கூட்டங்களிற்கு ஆட்களை திரட்ட மேற்படி இரண்டு தரப்பும் பெரும் தொகை பணத்தை தண்ணீராக இறைத்தனர். அங்கயன் இராமநாதன் தரப்பினர் கடந்த சில தேர்தல்களாக இந்த மோசமான கலாச்சாரத்தை தொடர்ந்து வருவதாக விமர்சனம் உள்ளது.

இந்த பின்னணியில், தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பல பிரச்சாரக் கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆட்களை ஏற்றிச் செல்லும் மோசமான கலாச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, சுவாரஸ்யமான சம்பவமொன்று நடந்துள்ளது.

நேற்று யாழ்ப்பாணம் முத்திரைச்சந்தியில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் கூட்டமொன்றை நடத்தியிருந்தனர். இதேவேளை, தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்து கொடிகாமத்தில் கூட்டமொன்று நடந்தது.

கொடிகாமத்தில் நடந்த பொதுவேட்பாளர் ஆதரவு கூட்டத்துக்காக தலா 1000 ரூபா வீதம் வழங்குவதாக குறிப்பிட்டு, தென்மராட்சி கிராமமொன்றில் ஆட்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களை அழைத்து வர பேருந்து அனுப்பப்பட்டது. ஆனால் யாரும் வரவில்லை. ஏற்பாட்டாளர்கள் விசாரித்த போது, ரூ.1100 வீதம் வழங்குவதாக குறிப்பிட்டு, அந்த மக்களை முத்திரைசந்தி கூட்டத்துக்கு அழைத்து சென்றுவிட்டது தெரிய வந்ததாக, ஏற்பாட்டாளர்கள் தரப்பிலுள்ள ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

இதேவேளை, அண்மையில் திருகோணமலையில் நடந்த கூட்டத்துக்கும் மூதூர் போன்ற தூர இடங்களிலிருந்து பணம் வழங்கி ஆட்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தரப்பிலிருந்து அறிய முடிந்தது.

இதேவேளை, பொதுவேட்பாளர் தரப்பிலுள்ள மற்றொருவர் வேறொரு சுவாரஸ்ய தகவலையும் பகிர்ந்திருந்தார்.

பொதுவேட்பாளரை ஆதரிக்கும் தரப்பிலுள்ள ஒருவர், சிவில் சமூகத்தை சேர்ந்த ஒருவரை அழைத்து, பொதுவேட்பாளர் ஆதரவு கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். திடீரென நேற்று மாலை அவசரமாக, சிவில் சமூக நபரை தொடர்பு கொண்டு, “வேறொரு ஓடர் அவசரமாக வந்ததால் ஆட்களை கொண்டு செல்கிறேன். அந்த கூட்டம் முடிந்ததும் இரவு கூட்டத்தை வைக்கலாம். பேசிய தொகையில் பாதியை வழங்கினால் போதும்“ என்றாராம். நேற்று சங்கானையில் நடந்த பொதுவேட்பாளர் ஆதரவு கூட்டத்துக்கே அவர்கள், அவசர ஓடர் பெற்று ஆட்களை கொண்டு சென்றிருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

வெளிநாடு செல்ல பணம் சேர்க்க போதைப்பொருள் விற்ற பட்டதாரி யுவதி கைது!

Pagetamil

மலேசியாவில் இடம்பெறும் சொற்போர் விவாத போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவு!

Pagetamil

மாணவர்களிடையே அதிகரித்த புகையிலை உற்பத்திகளின் பயன்பாடு: வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

east tamil

ஹிக்கடுவவில் சலவை இயந்திரத்தில் மறைக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் போதைப்பொருள்: இருவர் கைது

east tamil

பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு: பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய புதிய மாற்றம்

east tamil

Leave a Comment