கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாசவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று(15) பகல்
பசுமைப்பூங்கா வளாகத்தில் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கூட்டமானது பசுமைப்பபூங்கா வளாகத்தில் இன்று பகல் 12 மணிக்கு பல ஆயிரகணக்கான மக்கள் மத்தியில் ஆரம்பித்திருந்தது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதின், பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், வே. இராதாகிருஸ்ணன், ஐக்கிய மக்கள்
கூட்டணியின் வடமாகான இணைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஸ், மாவட்ட இணைப்பாளர் அ.மரியசீலன், தமிழரசு கட்சியின் முன்னாள் பிரதேச சபைஉறுப்பினர் குமாரசிங்கம், சுப்பையா, மத தலைவர்கள் எனப்பலர் கலந்து கொண்டதுடன் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சியில் அண்மைய காலத்தில் நடந்த மிகப்பிரமாண்டமான பொதுக்கூட்டமாக இது கருதப்படுகிறது. சில நாட்களின் முன்னர் கிளிநொச்சியில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக ஈ.பி.டி.பி ஏற்பாடு செய்த கூட்டத்தில் அழைத்து வரப்பட்டிருந்த மக்களின் புகைப்படங்களை பிரசுரித்து, கிளிநொச்சி மக்களின் அரசியல் நிலைப்பாடு மாறிவிட்டது என ஈ.பி.டி.பியினர் எகத்தாளமிட்டுக் கொண்டிருந்த நிலையில், அவர்களின் கருத்தை பொய்யாக்கும் விதமாக பெருமெடுப்பிலான கூட்டத்தை சமத்துவக்கட்சி நடத்தியுள்ளது.




