Pagetamil
இலங்கை

மனநல சிக்கல்கள் உள்ளதா?… பரிசோதனைக்கு கோரிக்கை: நீதிமன்றத்துக்குள் அழுத அர்ச்சுனா!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவின் மனநிலை தொடர்பில் பரிசோதனை நடத்த வேண்டுமென சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினரும், சமூக செயற்பாட்டாளருமான கிசோர் தெரிவித்துள்ளார்.

தனது முகநூலில் நேற்று (11) வெளியிட்ட நேரலையில் இதனை தெரிவித்தார்.

சாவகச்சேரி நீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்கின் போது, அர்ச்சுனாவுக்கு பிணை கையெழுத்திட்டதிலிருந்து விலகுவதாக கிசோர் உள்ளிட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

நேற்றைய வழக்கின் போது, அர்ச்சுனா அழுவதை போலவும் பாவனை காட்டியிருந்தார்.

வழக்கின் பின்னர் தனது முகநூல் நேரலையில், கிசோர் உள்ளிட்டவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வழக்கம் போல முன்வைத்தார்.

இது தொடர்பில் கிசோர் நேற்று தனது முகநூலில் விளக்கமளித்திருந்தார்.

அர்ச்சுனா சுமத்திய ஆதாரமற்ற அவதூறுக்கு எதிராக மானநஸ்ட வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், அர்ச்சுனா சாவகச்சேரியில் இருந்த போது அடிக்கடி இரவில் மதுபானம் கேட்டதாகவும், தமது செலவிலேயே அதை வாங்கிக் கொடுத்ததாகவும், அர்ச்சுனாவே தனக்கு பணம் தர வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அர்ச்சுனாவின் மனநிலை தொடர்பில் பரிசோதனை நடத்த வேண்டுமென்றும், அவர் இயல்பான மனநிலையில் இல்லையென்றும் வெளிப்படுத்தியுள்ளார்.

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுமியை போலி அடையாளத்தில் வெளிநாடு அனுப்பிய முகவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

Leave a Comment