27.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
சினிமா

நடிகை மலைகா அரோரா தந்தை வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை

மும்பையில் பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாலிவுட் நடிகை மலைகா அரோரா, நடிகர் ஷாருக் கான் நடிப்பில் வெளியான தில் சே படத்தில் `சைய… சைய’ பாடலுக்கு நடனமாடி மிகவும் புகழ்பெற்றவர். அவர் ஏராளமான இந்தி படங்களில் குத்துப்பாட்டிற்கு நடனமாடி இருக்கிறார். இது தவிர டி.வி ஷோ நடத்தி வருகிறார். மலைகா அரோரா மும்பை பாந்த்ராவில் வசித்து வருகிறார். அவர் தந்தை அனில் அரோராவும், அவரது வீட்டில் வசித்து வந்தார். இன்று காலையில் நடிகை மலைகா அரோரா வீட்டில் இல்லாத நேரத்தில், அனில் அரோரா வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

என்ன காரணத்திற்காக அனில் அரோரா தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. போலீஸார் விரைந்து வந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனில் அரோரா, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கேள்விப்பட்டதும், மலைகாவின் உறவினர்கள் மற்றும் மலைகா அரோராவின் முன்னாள் கணவர் அர்பாஸ் கான் ஆகியோர் மலைகாவின் வீட்டிற்கு விரைந்து வந்தனர். மலைகா அரோராவிற்கு 11 வயது இருக்கும்போதே பெற்றோர் இருவரும் பிரிந்துவிட்டனர்.

மலைகாவையும் அவரின் சகோதரியையும் அவர் தாயார்தான் கஷ்டப்பட்டு வளர்த்தார். மலைகா அரோரா, அர்பாஸ் கானை திருமணம் செய்து 19 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு தன்னை விட வயது குறைவான நடிகர் அர்ஜூன் கபூரை மலைகா தீவிரமாக காதலித்து வந்தார். ஆனால் சமீபத்தில் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. இப்போது இருவரும் சேர்ந்து எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25இல் ரிலீஸ்

Pagetamil

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

Leave a Comment