மசாஜ் நிலையம் ஒன்றிற்கு வாள் ஏந்தியபடி சென்ற 6 பேர் இரு பெண்களை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக யக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கம்பஹா, பல்லும்மஹர பகுதியில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மசாஜ் நிலையத்தில் 5 பெண்கள் இருந்ததாகவும், சந்தேகநபர்கள் அவர்களை அறையில் அடைத்து வைத்து அவர்களிடம் இருந்த செல்போன்கள், பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றதாகவும், மசாஜ் நிலையத்தில் இருந்த இரு பெண்களை கடத்திச் சென்று கும்பல் பலாத்காரம் செய்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
கம்பஹா மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரைக்கு அமைய, யக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1