ஜனசெத பெரமுனவின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையப் பகுதியில் பிரசார நடவடிக்கைகளை பத்தரமுல்ல சீலரத்ன தேரர் முன்னெடுத்தார்.
இதன்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணத்தை விளக்கும் சிங்கள மற்றும் தமிழ் மொழியிலான துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உழவு இயந்திர சின்னத்தில் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1