வடமாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலைகளில் நாளை ஒரு மணித்தியால அடையாள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த காலத்தில் அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்ட மருந்து பற்றாக்குறைகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தி தரமற்ற மருந்து கொள்வனவை எதிர்த்து குரல் கொடுத்த அரசவைத்து அதிகாரிகள் சங்கத்தினரின் தலைவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒருதலைப் பட்சமான சுயாதீனமற்ற தொழில்நுட்ப அறிவு அற்ற விசாரணைக் குழுவின் செயற்பாடுகளுக்கு எதிராகவும். தொழிற்சங்க உரிமைகளை நசுக்கும் செயற்பாடுகளுக்கு எதிராகவும். நாளை (செப்.03)மதியம் 12 மணியிலிருந்து 01 மணி வரை அடையாள பலணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் இடம்பெற உள்ளது. வட மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் போராட்டமானது இடம்பெறும் என அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.