கம்பியில் சிக்கிய சிறுத்தை பலி

Date:

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை லக்கம் தோட்டத்தின் சிறுத்தைபுலியொன்று வீட்டுத்தோட்ட பகுதியில் கம்பியில் சிக்கி, தப்பிக்க முடியாமல் பலமணிநேரம் தவித்து வந்த சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்படி சிறுத்தைப்புலி சிக்கியிருப்பதை அறிந்த அப்பகுதியினர் அது தொடர்பில் இன்று (01) காலை தோட்ட அதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளார். பின்னர் அதிகாரி மஸ்கெலியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார்.

அதன்பின்னர் பொலிஸார் ஊடாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்ததுடன், தோட்ட மக்களும் குவிந்தனர்.

மரக்கறி தோட்டத்திலிருந்து, மிருகங்களிடமிருந்து விளைச்சலை பாதுகாக்கும் நோக்கில் போடப்பட்டிருந்த கம்பி வலையிலேயே இச்சிறுத்தைப்புலி சிக்கியுள்ளது.

கம்பியில் சிக்கிய சிறுத்தைப்புலி கம்பியில் இறுக, தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொண்டது. பின்னர் தவித்து வந்த சிறுத்தை உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த சிறுத்தையை அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும், பின்னர் நீதவானின் உத்தரவின் பேரில் சடலம் பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், கம்பி வலையை போட்ட சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மஸ்கெலியா பொலிஸார், நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்