திருடிய வீட்டில் உடைமாற்றி வெளியேறிய திருடன்: சாவகச்சேரி பொலிசார் வலைவீச்சு!

Date:

யாழ்.தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றில் யாரும் இல்லாத வேளை இனந்தெரியாத நபர் ஒருவர் புகுந்து பெருமளவு பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பித்துள்ள சம்பவம் தொடர்பில் சிசிரிவி கமராவில் பதிவாகிய காணொளி ஆதாரத்துடன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில், வியாழக்கிழமை (29) அன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த கமராவில் , நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழையும் போது ஒரு உடையுடனும் வீட்டில் நுழைந்து திருட்டை மேற்கொண்ட பின் வெளியேறும் போது வேறு உடையையும் மாற்றிச் செல்வது பதிவாகியுள்ளது .

குறித்த காணொளியினை சாவகச்சேரி பொலிஸார் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளதுடன் அதில் பதிவாகியுள்ள நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக 0718591337 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பலித செனவிரட்ன மக்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் மக்கள் வீடுகளில் பணம் மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல்,...

மண்டைதீவு படுகொலை வழக்கு மீண்டும் செப்டம்பர் 22 வரை ஒத்திவைப்பு

மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்