கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற வழக்கு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 24 கோடி ரூபா பெறுமதியான 12 கிலோ ஹெரோயின் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற வழக்கு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்த ஹெரோயினை இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர் போன்று பாவனை செய்து அரசாங்க சுவையாளரிடம் வழங்குவதற்காக எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளதால், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்ய கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இரகசிய பொலிஸ் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
இரகசியப் பொலிஸார் என கூறி ஹெரோயினை எடுத்து சென்றதாகக் கூறப்படும் ‘தரிந்து யோசித’ யார்? என்பதை கண்டறிய உடனடி விசாரணை நடத்துமாறு நீதவான் இரகசிய பொலிஸ் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு முகாமையாளர் உள்ளிட்ட வழக்கு அறையில் பணியாற்றிய அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.