Pagetamil
இந்தியா

திருமணம் நிச்சயமான பின் காதலனுடன் ஓடிச்சென்றது குற்றமா?: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

புனேயைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது பெற்றோர் பார்க்கும் மணமகனை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். ஆனால் திருமணத்திற்கு முன்பு கடைசி நேரத்தில், தான் விரும்பும் நபருடன் வேட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதையடுத்து அப்பெண் மற்றும் அவரது பெற்றோர் மீது மணமகன் போலீஸில் மோசடி புகார் செய்தார்.

போலீஸார் அதன் அடிப்படையில் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். 2021ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் அப்பெண்ணும், அவரது பெற்றோரும் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனு நீதிபதிகள் அஜய் கட்கரி, நீலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இம்மனு மீதான விசாரணையின் இறுதியில் மனுதாரர்கள் மீதான வழக்கை ரத்து செய்த நீதிபதிகள், இளம்பெண் வேறு வழியில்லாமல் பெற்றோர் முடிவு செய்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

`திருமணம்; கடைசி நேரத்தில் மணப்பெண் வீட்டைவிட்டு வெளியேறுவது, மோசடியாகாது!’ – மும்பை உயர் நீதிமன்றம்
தனது காதலனுடனான உறவை துணிச்சலுடன் தனது பெற்றோரிடம் சொல்லாமல் இருந்ததை குற்றமாக கருதமுடியாது. மௌனமாக இருப்பது நியாயமற்றதாக இருக்கலாம். ஆனால் நேர்மையற்றதாக இருக்காது. மகள் அமைதியாக இருக்கிறார் என்பதால், அவர் தாங்கள் பார்க்கும் மணமகனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளார் என்று பெற்றோர் நினைத்தனர். ஆனால் கடைசி நேரத்தில் பெண் தான் விரும்பும் வாலிபருடன் சென்றது, நேர்மையற்ற செயல் கிடையாது. ஏமாற்றுவதாக இருந்தால், ஏமாற்றும் எண்ணம் ஆரம்பத்தில் இருந்தே இருக்க வேண்டும்.

ஆனால் இங்கு ஆரம்பத்தில் இருந்தே ஏமாற்றும் நோக்கம் எதுவும் இருந்ததாக தெரியவில்லை. பெண் தனது சொந்த விருப்பப்படி ஒருவரை காதலித்ததால் இந்த சூழ்நிலை உருவானது, என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

நல்லி குப்புசாமி, அஜித், ஷோபனாவுக்கு பத்ம பூஷண்; அஸ்வின், வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

Pagetamil

வேங்கைவயல் சம்பவம் தனிப்பட்ட விரோதம்: தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் – தமிழக அரசு வேண்டுகோள்

Pagetamil

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பெயரில் பலகோடி மோசடி

east tamil

மஹா கும்பமேளாவில் மீண்டும் தீ

east tamil

Leave a Comment