கொலை, கப்பம் பெறுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கிட்மால் பினோய் தில்ஷான், டுபாயிலிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவினால் இன்று (29) அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த சந்தேக நபர் மத்துகம ஷான் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் பிரதான அடியாள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள குழுவொன்று இந்த விமானத்திற்கு சென்று இந்த நபரை கைது செய்து மத்துகம பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1