பொதுஜன பெரமுனவிலிருந்து பல்டியடித்து, ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மேடையில் ரணிலுக்கு பதிலாக மஹிந்தவின் பெயரை உச்சரித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
துக்கத்தில் இருந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தலைவர் மகிந்த ராஜபக்ச என கூறியவர், உடனடியாக சுதாகரித்துக் கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என திருத்திக் கொண்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ரஜிகா விக்கிரமசிங்கவே இவ்வாறு தெரிவித்தார்.
மாவனெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் இந்த சம்பவம் நடந்தது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர், இந்த ஜனாதிபதி தேர்தலில் .ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் பல்டியத்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டினால் பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்படாது என்ற வாக்குறுதியின் அடிப்படையில், மக்கள் தீர்ப்பை எதிர்கொள்ள தயங்கும் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ரணில் பக்கம் பல்டியத்துள்ளதாக பரவலாக விமர்சிக்கப்படுகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராஜபக்ச முகாமிலிருந்த ஈ.பி.டி.பியும், தற்போது ரணில் தரப்புக்கு பல்டியத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.