28.8 C
Jaffna
September 11, 2024
முக்கியச் செய்திகள்

லைக்கா நிறுவனத்திடம் பொதுவேட்பாளருக்கு நிதி கோர யோசனை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடலுக்கு விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லையென தமிழ் பொதுவேட்பாளர் தரப்பு தீர்மானித்துள்ளது.

இன்று (26) யாழ்ப்பாணத்தில் கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டனர்.

தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கியுள்ள போதும், பிரச்சார பணிகளுக்கு நிதி திரட்ட முடியாமலிருப்பது பற்றி அங்கு ஆராயப்பட்டது. லைக்கா நிறுவனத்தின் சுபாஸ்கரனிடமும் நிதி கோருவதென பேசப்பட்டது.

பொதுவேட்பாளர், இரண்டு மூன்று உதவியாளர்களுடன் மட்டும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டிய ரெலோ, ஏராளம் அமைப்புக்கள் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாக குறிப்பிட்டீர்களே, அமைப்பிற்கு ஒருவர் வீதம் வந்தாலே பிரச்சாரத்தை பெருமெடுப்பில் மேற்கொள்ளலாமே என ரெலோ கேட்டது.

இந்த வகையான அமைப்புக்களில் பெரும்பாலானவை- ஆட்களற்ற, காகிதத்தலைப்பு அமைப்புக்கள் என்பதால், சிவில் சமூகமென குறிப்பிடும் தனிநபர்கள் மூச்சும் காட்டவில்லை.

தமக்குள் பிரிவினையை ஏற்படுத்த சில தரப்புக்கள் முனைவதாக பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதும் நிலாந்தன் குறிப்பிட்டார்.

சிவில் தரப்பு குறிப்பிடுவதை கட்சிகள் கேளாமல் விட்டால் பிரிவினை வரும். ஆனால், சிவில் தரப்பு குறிப்பிடுவதை- சிவில் தரப்புக்கு அரசியல் அனுபவமில்லா விட்டால் கூட- கட்சிகள் கேட்கின்றன. அதேபோல, நீண்ட அனுபவமுள்ள கட்சிகள் குறிப்பிடுவதை சிவில் தரப்பு கேட்காமல் விட்டாலும் பிரிவனை வரும். இப்பொழுது கட்சிகள் குறிப்பிடும் பலவற்றை நீங்கள் (சிவில் தரப்பு என குறிப்பிடப்படுவோர்) கேட்காமலிருக்கிறீர்களே. அப்படியெனில் பிரிவினை வரும்தானே“ என ரெலோவின் தேசிய அமைப்பாளர் சுரேன் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் அழைப்பு விவகாரம் ஆராயப்பட்ட போது, அழைப்பை ஏற்று சந்திப்பில் கலந்து கொள்வது தென்னிலங்கை சிங்கள பேரினவாதிகளுக்கு சேவகம் செய்வது, அடிமைதனமாக செயற்படுவது என காரசாரமாக விமர்சித்தார் கட்டுரைகள் எழுதும் நிலாந்தன்.

ரெலோ அதை ஆட்சேபித்தது. விடுதலைப் புலிகள் அரசுகளுடன் பேச்சு நடத்தியது சேவகம் செய்வதற்கா என கேள்வியெழுப்பியது. அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை புரிய வைத்த ரெலோ, அரசியல் என்பது பத்திரிகைகளில் கட்டுரை எழுதுவதை போன்ற விடயமல்ல என நிலாந்தனிற்கு கூறியது. பொதுவேட்பாளரிற்கு பணம் திரட்டுவதை பிச்சையெடுப்பது என கூறலாமா என்றும் கேட்டது.

இதையடுத்து தனது வார்த்தைகளை திரும்பப்பெறுவதாக நிலாந்தன் குறிப்பிட்டார்.

பின்னர், பொதுவேட்பாளர் தேர்தல் விஞ்ஞாபன வரைபை பற்றி குறிப்பிட்டனர். அது தேர்தல் விஞ்ஞாபனமாக தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. ஒவ்வொரு விடயமாக குறிப்பிட்டு, கோரிக்கை விடுக்கிறோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

யாரிடம் கோரிக்கை விடுகிறீர்கள் என கட்சிகள் கேட்டன. மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக விஞ்ஞாபனத்தை தயாரித்த நிலாந்தன், கணேசலிங்கம் குழு குறிப்பிட்டது. தேர்தல் விஞ்ஞாபனம் அப்படி தயாரிப்பதல்ல, நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதையே அதில் குறிப்பிட வேண்டுமென ரெலோ சுட்டிக்காட்டியது. அதை மணிவண்ணனும் ஆமோதித்தார்.

விஞ்ஞாபன வரைவை சரி செய்து, நாளை பார்வைக்கு அனுப்புவதாக கட்டுரையளர்கள் தெரிவித்தனர்.

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டத்தையே தமது திட்டமாக பிரேரிப்பதாக விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ரெலோ அதை ஏற்கவில்லை. நிலாந்தனும், கணேசலிங்கமும் அந்த வரைவை தயாரித்திருக்கலாம், ஆனால் அந்த தரப்பில் தாம் இருக்கவில்லை, அதில் என்ன உள்ளதென்றும் எமக்கு தெரியாது, அதனால் அதை தம்மால் ஏற்க முடியாதென ரெலோ தெரிவித்தது. இதையடுத்து, அதை கைவிட தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டார்.

7 கட்சிகள் இணைந்து அரியநேந்திரனை பொதுவேட்பாளராக பிரகடனப்படுத்தியுள்ளன. ஆனால் அந்த கட்சிகளுடனும், அதன் தலைவர்களுடனும் அரியநேந்திரன் பேசவில்லை. இலங்கை தமிழ் அரசு கட்சியின் சி.சிறிதரனை சந்தித்து, அவர்தான் சங்கு சின்னத்தை பரிந்துரைத்தார் என பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதை கட்சிகள் குறிப்பிட்டன.

சிறிதரன் நட்பு நிமித்தம் சந்திக்க அழைத்ததாகவும், அங்கு இரவு உணவை உண்டதாகவும், அங்கு பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டு, ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தனக்கு தெரியாதென்றும், பொதுவேட்பாளர் தரப்பிலுள்ள கட்சிகளை சந்தித்து பேசுவதாகவும் அரியநேந்திரன் தெரிவித்தார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மறுபடியும் முதல்லயிருந்தா?… ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாட்டை தீர்மானிக்க தமிழ் அரசு கட்சி மீண்டும் கூடுகிறது!

Pagetamil

ENG vs SL | 10 வருடங்களின் பின் இலங்கைக்கு கிடைத்த டெஸ்ட் வெற்றி!

Pagetamil

அரியத்துக்கு ஒரு குத்து… ரணிலுக்கு ஒரு குத்து: ரணிலை இரகசியமாக சந்தித்த மாமியாரும், மருமகனும்!

Pagetamil

4 இராஜாங்க அமைச்சர்களை பதவி நீக்கிய ரணில்

Pagetamil

இந்திய மீனவர்களும் வடக்கு கிழக்கு கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டுமென்கிறதா அரியநேந்திரனின் தேர்தல் அறிக்கை?

Pagetamil

Leave a Comment