27.8 C
Jaffna
September 15, 2024
இலங்கை

பாராளுமன்றத்தில் அறிவித்தாலும் பதவியை துறக்காத தலதா!

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்து கோரள தனது பதவியை இராஜினாமா செய்வதாக நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ள போதிலும், சபாநாயகருக்கு நேற்றும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாததன் காரணமாக அடுத்த பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் சிக்கலாகியுள்ளது.

இது தொடர்பில் பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீரவிடம் வினவிய போது, ​​தலதா அத்துகோரள தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்காததால், அந்த பாராளுமன்ற வெற்றிடத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க முடியவில்லை என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அத்து கோரள நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தலதா அதுகோரளவின் இராஜினாமாவுடன், கருணாரத்ன பரணவிதான நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்து கோரளவுக்கு அடுத்தபடியாக அந்த மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்றவர் பரணவிதான. கடந்த பொதுத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 36787 ஆகும்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

21,22ஆம் திகதிகளில் மதுபானச்சாலைகள் மூடல்

Pagetamil

பல அரசியல்வாதிகளுக்கு பீதியை ஏற்படுத்திய அநுரவின் அறிவிப்பு!

Pagetamil

பொதுவேட்பாளர் மூலம் தமிழர் தலைவிதியை தீர்மானிக்கும் காலம் கனிந்துள்ளதாம்: யாழ் பல்கலைகழக மாணவர்களின் அரசியல் விளக்கம் இது!

Pagetamil

யாழில் ரணிலின் பிரச்சாரக் கூட்டம்

Pagetamil

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

Pagetamil

Leave a Comment