25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த சிசுவின் உறவினர்கள் போராட்டம்

வவுனியா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் மரணித்த சிசுவின் பெற்றோர்க்கு நீதிகிடைக்குமாறு கோரி ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டமானது வவுனியா வைத்தியசாலையின் பிரதான வாயிலின் முன்பாக நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது-

குழந்தையின் தாய் வலிதாங்க முடியாமல் பல மணிநேரங்கள் கதறியபோதும் அவருக்கு சிசேரியன் செய்யவில்லை. இவ்வாறனவர்களை நம்பி இந்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எப்படி செல்ல முடியும்.

குறித்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணையில் எமக்கு துளியும் நம்பிக்கை இல்லை. எனவே சுகாதார அமைச்சினுடாக ஒரு குழு நியமிக்கப்பட்டு இதற்கான நீதியான விசாரணையினை மேற்கொள்ளவேண்டும். அதுபோலவே சிசுவின் சட்டவைத்திய பரிசோதனையினையும் கொழும்பு வைத்தியர்கள் மூலம் முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன் பொறுப்பே இல்லாத இந்த வைத்தியசாலைக்கு மூன்று பணிப்பாளர்கள் இரண்டு நிர்வாக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஏன் என்று எமக்கு தெரியவில்லை.
எனவே இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்கும் வரைக்கும் பொதுமக்கள் இங்கு மகப்பேற்றுக்காக வரவேண்டாம் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்தனர்.

இதேவேளை நேற்று மாலை சிசுவின் சடலத்தை வவுனியா வைத்தியசாலை பிரேத அறையில் நீதிபதி பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment