தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலு குமார் ஆகியோர் சக்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேரலை விவாதத்தின் போது சண்டையிட்டனர்.
இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடுமையான வார்த்தைகளை பரிமாறிக் கொள்வதும், பின்னர் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டதும் வீடியோவாக வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி ஊழியர்கள் உடனடியாக தலையிட்டு இருவரையும் பிரித்தனர்.
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார். அவர் கட்சியின் முடிவை மீறி பல்டியடித்து இந்த முடிவை எடுத்தார்.
ரணில் விக்கிரமசிங்க தரப்பை ஆதரிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் மதுபானச்சாலை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்திருந்தது. வேலுகுமாருக்கும் அவ்வாறான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக சில தரப்பினர் பகிரங்கமாகவே குற்றம்சுமத்தியிருந்தனர்.
அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.